‘இவன் தந்திரன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

236

ivan thanthiran

ஆர்.கண்ணன் டைரக்சனில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘இவன் தந்திரன்’.. கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.. படத்தில் ஆர்ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் காமெடியனாக நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த சம்மருக்குள் ஏதோ ஒரு தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கின்றனர் படக்குழுவினர்.

Comments are closed.