கே.எஸ்.அதியமான் டைரக்சனில் உதயநிதி நடிக்கும் ‘ஏஞ்சல்’..!

245

angel

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘ஏஞ்சல்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

ஏபிசிடி”, நேபாளி ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் இந்த ‘ஏஞ்சல்’ திரைப்படம் உருவாகிறது. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

Comments are closed.