பிரியதர்சன்-உதயநிதி படம் பூஜையுடன் துவங்கியது..!

277

udhayanithi-priyadharsan

மலையாளத்தில் கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தன பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’.. இந்தப்படம் 2 தேசிய விருதுகள் மற்றும் 7 மாநில அரசு விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளியது. தற்போது இந்தப்படம் தான் தமிழில் உதயநிதி நடிக்க ரீமேக்காகிறது..

பிரபல இயக்குனர் பிரியதர்சன் தான் இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார்.. சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்திற்கு வசனமும் எழுதுகிறார். கதாநாயகிகளாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

Comments are closed.