“உத்தரவு மகாராஜா” – கட்டளையை நிறைவேற்றும் உதயா..!

218

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயா கிட்டத்தட்ட 15 வருடமாக, அவ்வப்போது சில படங்களில் நடித்து தனது இருப்பை தக்கவைத்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு விஜய்யின் தலைவா’ படத்தில் வீடியோ குமாராக முக்கியமான வேடத்தில் நடித்தவர், தற்போது ஆவி குமார் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

முழுக்க முழுக்க காமெடியாக உருவாகிவரும் இந்தப்படத்தில் ஆவிகளுடன் பேசும் மீடியமாக நடிக்கிறார் உதயா. இது தவிர தற்போது ‘உத்தரவு மகாராஜா’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் உதயா. தவிர தனது அடுத்த படத்தை சொந்தமாக தயாரிக்கப்போவதாகவும் நல்ல கதை வைத்திருப்பவர்கள் தனை தேடிவரலாம் என்றும் கூறியுள்ளாராம் உதயா.

Comments are closed.