கலைஞர் கருணாநிதியின் படைப்புகள் இல்லாமல் தமிழ் சினிமா வளர்ந்திருக்க முடியாது. அவரது கதை, வசனத்தில் உருவான படங்கள் தான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் சினிமாவில் அடித்தளம் அமைத்து தந்தன. இந்த தள்ளாத வயதிலும் சில வருடங்களுக்கு முன்பு வரை, பாசக்கிளிகள், பொன்னர் சங்கர், இளைஞன் என தனது பங்களிப்பபை தரவும் தவறவில்லை.
தற்போது வைஷ்ணவ் ஆச்சார்யரான ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சீரியலாக்கினால் என்ன என்கிற எண்ணம் அவருக்குள் தோன்றவே, சீரியல் தயாரிப்பில் அனுபவசாலியான குட்டி பத்மினியை அழைத்து அந்த பொறுப்பை அவர்வசம் ஒப்படைத்துள்ளார். குட்டி பத்மினிக்கும் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தொடராக எடுக்கவேண்டும் என்கிற விருப்பம் இருந்ததால் உடனே சம்மதம் சொல்லி கலைஞரை சந்தித்துள்ளார்.
அப்போது ராமானுஜர் குறித்து தான் எழுதிய கட்டுரைகளையும், தான் படித்த புத்தகங்களையும் குறிப்பெடுப்பதற்காக கொடுத்தும் உதவியுள்ளார் கலைஞர்.. மேலும் “தன்னுடைய கருத்துக்களின் படி தான் இந்த தொடரை எடுக்கவேண்டும் என சொல்லமாட்டேன்.. ஆனால் அவர் வாழ்க்கையில் நடந்ததை நடந்தபடி சொன்னால் போதும்” என்று சுதந்திரமும் கொடுத்துவிட்டாராம் கலைஞர்.
Comments are closed.