
விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘யாமிருக்க பயமே’. கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
‘பயம் ‘ என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘யாமிருக்க பயமே’. கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து சென்சாருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார்குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் மே-16ஆம் தேதி இந்தப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.