’விடுதலை – பாகம் 2’ வெற்றி! – படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார்

155

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான ‘விடுதலை – பாகம் 2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘விடுதலை – பாகம் 2’ படத்தின் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இதற்கான விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, அவர்களுக்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.