‘பிரியாணி’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். ஆக்ஷன் படம் என்று பார்க்கும்போது இது ஒரு வகையில் உற்சாகமான செய்தி தான்.. அதனால் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர்-20ல் மெகா ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
வெங்கட்பிரபுவின் இந்த ஆக்ஷன் பேக்கேஜ் கார்த்தியை வேறு ஒரு தளத்தில் பயணிக்க வைக்கும் என்கிறது ‘பிரியாணி’ யூனிட். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது பிரியாணி.