இரட்டையர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் ‘குரு சுக்ரன்’

231

தமிழ் சினிமாவில் ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் வில்லன்களின் அடியாட்களாகவோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரமாகவோ ரொம்பவே அரிதாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் முதன் முதலாக ‘குரு சுக்ரன்’ என்ற படத்தில் குரு, கமல்நாத் என்கிற இரட்டையர்கள் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக சாத்னா டைடஸ் நடிக்க, முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சுதாசந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார் பி.ஆனந்த்.  இவர் சமீபத்தில் வெளியான ‘மௌன மழை’ படத்தை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, அம்பா சமுத்திரம், செங்கோட்டை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

 

Comments are closed.