அஜித் சினிமா விழாக்களில் கலந்துகொள்ள விரும்பாதது அவரது கொள்கை ரீதியான முடிவு. மற்றவர்கள் அதை குறையாக சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். அஜித்திடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே அதுதான். அதனால தான் ‘ஆரம்பம்’ படம் போலவே ‘வீரம்’ படத்தின் இசைவெளியீட்டையும் ரொம்பவே எளிமையாக நடத்த இருக்கிறார்கள்.
நாளை ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்.மில் காலை 8 மணி முதல் 11 மணி வரை ‘வீரம்’ படம் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. மேலும் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய சுவையான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.