பொங்கலுக்கு வெளியாகப்போவது ‘ஜில்லா’ மற்றும் ‘வீரம்’ என இரண்டே படங்கள்தான் என்பது உறுதியே ஆகிவிட்டது. அஜித்தின் வீரம் படத்தின் வெற்றிக்கு என்னென்ன காரணிகள் பக்கபலமாக இருக்கும் என கதை ரீதியாக பலர் அலசி ஆராய்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்டிமெண்ட் ரீதியாகவும் ஒரு ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது.
முதல் சென்டிமெண்ட் படத்தின் பெயரான ‘வீரம்’ ஆங்கில எழுத்தான ‘வி’யில் ஆரம்பிக்கிறது. அஜித்தின் முந்தைய சூப்பர்ஹிட்டுகளான ‘வான்மதி’, ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’ ஆகிய படங்களின் எழுத்துக்களும் ‘வி’யில்தான் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் ‘வீரம்’ படத்தின் வெற்றி உறுதியான ஒன்று என்கிறார்கள் சிலர்.
இன்னும் சிலரோ “இந்தப்படத்தில் அஜித்தின் பெயர் விநாயகம். ‘மங்காத்தா’ படத்திலும் ‘விநாயக்’ என்ற பெயரில் தான் அஜித் நடித்திருந்தார். அந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதுபோல இதுவும் ஹிட்டாகும் என்கிறார்கள் சோழிகளை உருட்டாமலேயே. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.