தாய்க்கும் பேய்க்கும் நடக்கும் போராட்டம்..!

226

அழுகின்ற சின்னக்குழந்தைகளை மிரட்ட பயன்படும் வார்த்தை தான் ‘மூச்’.. இந்த வார்த்தையின் பெயரில் தற்போது ஒரு படம உருவாகியுள்ளது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த எஸ்.வினுபாரதி என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இரு குழந்தைகளை உயிர்மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும் பேய்க்கும் இடையில் திகிலோடு நடக்கும் பாசப்போராட்டம் தான் ‘மூச்’. நிதின், மிஸா கோசல் என்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் மற்றும் சுகாசினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். நித்யன் கார்த்திக் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பை 50 நாட்களில் நடத்தி முடித்துள்ளார்கள்.

Comments are closed.