வரும் பொங்கல் பண்டிகையில் சுமார் ஆறு படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுவரை மூன்று படங்கள் மட்டுமே களத்தில் குதிக்க தயாராக இருகின்றன.
அவற்றில் முதல் எதிர்பார்ப்பில் இருப்பது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’.. விக்னேஷ் சிவன் டைரக்சனில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். நவரச நாயகன் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதுதவிர விஜய்சந்தர் டைரக்சனில் விக்ரம், தமன்னா நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ மற்றும் கல்யாண் டைரக்சனில் பிரபுதேவா, ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
மேலும் பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விமலின் ‘மன்னர் வகையறா’, கலகலப்பு-2 ஆகிய படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

Comments are closed.