தற்கொலை அதிகரிப்பு ஏன்..? ; ‘திட்டிவாசல்’ படம் சொல்லும் பகீர் உண்மை..!

219

thittivasal

சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பதுபோல, அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது.. அப்படி அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகள் பிரதிபலிக்கும் படமாக ‘திட்டி வாசல் ‘உருவாகியிருக்கிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தமது பிரச்சனைக்கு நீதி கிடைக்காத சாமானிய மக்கள் சிலர் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர் வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர்.

கண்ணெதிரில் சிறுவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பல கோணங்களில் புகைப்படமும் வீடியோவும் எடுத்து தனது திறமையை நிரூபித்துக்கொள்கிறது மனிதநேயமில்லா ஒரு கூட்டம். அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.

இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள். இறந்த பெண் யார்? அவளின் பிரச்சனைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதே ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக்கதை. சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். வருகின்ற நவ-3 ம் தேதி இந்த திட்டி வாசல் வெளியாகிறது.

Comments are closed.