வித்தியாசமான பெயர்களுடன் களம் இறங்கினால்தான் ரசிகர்களை கவரமுடியும் என்கிற இன்றைய சூழ்நிலையில் ‘தெகிடி’ என புதுவிதமான பெயருடன் களம் இறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.ரமேஷ். இவர் வேறு யாருமல்ல. கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் சீசனில் கலந்துகொண்டு முதல் பரிசை தட்டிச்சென்றவர்தான்..
க்ரைம் த்ரில்லரான இந்தப்படத்தில் ‘வில்லா’ படத்தில் நடித்த அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜனனி ஐயர் நடித்திருக்கிறார். தணிக்கை குழுவினரால் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி-28ல் வெளியாக இருக்கிறது. தொடர் வெற்றிப்படங்களாக தயாரித்துவரும் சி.வி.குமாரின் தயாரிப்பு இது, படத்தை அபி மற்றும் TCS ஸ்டுடியோஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் வெளிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.