‘பீட்சா-2 தி வில்லா’ படத்தை தொடர்ந்து திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் படம் தான் ‘தெகிடி’. வில்லா’ படத்தில் நடித்த அசோக் செல்வன் தான் படத்தின் நாயகன்.. கதாநாயகி ஜனனி ஐயர். அறிமுகமாகிறார். படத்தை பி.ரமேஷ் என்பவர் இயக்க, நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார்.
தெகிடி என்பது ஒரு வகையான சூதாட்ட விளையாட்டை குறிக்கும்.. அதேபோல இங்கே ஹீரோவுக்கே தெரியாமல் அவனை வைத்து சிலர் விளையாடும் விளையாட்டுகளும், அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளும்தான் இந்த கிரைம் திரில்லர் படம். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் பிப்-28ல் இந்தப்படம் திரையரங்குகளுக்கு வருகிறது.