தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அரசு உத்தரவு ; முழு விபரம்..!

264

theater tickets hike

திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்கலாம் என்று அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 160ம் குறைந்தபட்சமாக ரூ 50ம் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 120ம் குறைந்தபட்சம் ரூ. 40ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற நகரங்களில் ஏசி திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 140ம், குறைந்தபட்சமாக ரூ. 50ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற நகரங்களில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 100ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30ம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் உள்ள ஏசி திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 40ம், குறைந் பட்ச கட்டணமாக ரூ. 5ம் வசூலிக்கலாம். இதே போன்று ஏசி இல்லாத திரையரங்குகளில் ரூ. 30 அதிகபட்ச கட்டணமாகவும் ரூ. 5 குறைந்தபட்ச கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் ரூ. 15 மட்டுமே

பேரூராட்சிகளில் உள்ள ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ. 20 கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். ஊராட்சிகளில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 15 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

திங்கட்கிழமை முதல் அமல் அரசின் இந்த புதிய கட்டண விகிதங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. எனவே இந்த புதிய சினிமா கட்டண விகிதப்படியே அடுத்த வாரம் முதல் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையுடன் ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகள் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.