“தியேட்டர்களை இடிப்பதை கலாச்சார சீரழிவாக பார்க்கிறேன்” – நாசர் வருத்தம்

135

நம்ம ஊர்ப்பக்கம், குறிப்பாக தஞ்சாவூர் பகுதிகளில் நிலத்தின் அளவை பற்ரி சொல்லும்போது ‘குழி’ என குறிப்பிடுவார்கள். தற்போது அதை மையப்படுத்தி ‘ஒன்பது குழி சம்பத் ’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. புதுமுகங்கள் நடிப்பில் ஜா.ரகுபதி இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பம்சமாக, தியேட்டரை கண்டுபிடித்த சாமிக்கண்ணு வின்செண்ட்டை கௌரவப்படுத்தும் விதமாக ஏப்ரல்-18ஐ திரை அரங்கு தினமாக அறிவித்தனர். இந்த விழாவில் நாசர், வேதிகா, அப்புக்குட்டி இயக்குனர்கள் குழந்தை வேலப்பன், கமலக்கண்ணன், மூடர்கூடம் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நாசர், “சாமிக்கண்ணு வின்செண்டுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும். இப்போது தியேட்டர்கள் அழிந்து வருவதைக் கண்டு நாம் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தியேட்டர்கள் இடிப்பதை நான் பொருளாதார சிக்கலாகப் பார்க்கவில்லை. கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். தயவு செய்து சினிமாவை வியாபாரமாகப் பார்க்க வேண்டாம். திருட்டு டிவிடியை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் கண்டிப்பாக நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்ப்பார்கள்” என்று தனது ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார்.

Comments are closed.