“வில்லனாக புது அவதாரம் எடுத்துள்ளேன்” – விக்ராந்த்..!

195

‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த்சுவாமி வில்லத்தனத்தில் காட்டிய புதிய பாணியை பார்த்து இப்படியும் கூட வில்லத்தனம் காட்டலாமா என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுத்தான் போனார்கள்.. அந்த ஆச்சர்யத்தை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு தர இன்னொரு ஹீரோ தயாராகிக்கொண்டு இருக்கிறார். அவர் தான் விக்ராந்த்.. திருக்குமரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கெத்து’ படத்தில் உதயநிதியின் வில்லன் இவர்தான்..

“வில்லனாக நடிக்கும்போது புது அவதாரம் எடுத்தமாதிரி உணர்கிறேன்.. சொல்லப்போனால் வில்லனாக நடிக்கும்போது நிறைய ஸ்கோப் கிடைக்கிறது. அதிலும் இந்தப்படத்தில் நீங்கள் பார்க்கப்போவது வழக்கமான வில்லன் கதாபாத்திரமாக இருக்காது.. தொடர்ந்து வில்லன் கேரக்டர்கள் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னால் பண்ணமுடியும்” என்கிறார் விக்ராந்த்.

Comments are closed.