மலையாள சினிமாவைப் பொறுத்தவரை அவர்கள் ஆங்கிலம், இந்தி என பிற மொழி வார்த்தைகளிலும் படத்திற்கு பெயர் வைப்பதால் டைட்டிலுக்கு அவர்களுக்கு பஞ்சம் ஏற்படுவதே இல்லை. அந்த வகையில் ஏற்கனவே அன்னா ஹசாரே மூலமாக ‘லோக்பால்’ என்ற வார்த்தை பிரபலமானபோது அதயே மோகன்லால் நடித்த படத்திற்கு பெயராக வைத்து ஒரு படத்தையும் எடுத்து ரிலீஸ் பண்ணியும் விட்டார்கள்.
அதேபோல மிக்குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, நமது தலைநகர் டெல்லியிலும் ஆட்சியை பிடித்த, ‘ஆம் ஆத்மி’ கட்சியைப் பற்றி இன்று தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இப்போது இந்த ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரிலேயே மலையாலத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.
பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் லால் மற்றும் நகைச்சுவை நடிகர் இன்னசன்ட் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். அரசியல் சார்ந்த அதேசமயம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு தரும் செய்தியுடன் இதை படமாக எடுக்க இருக்கிறார்கள்.