கடந்தமாதம் இசைஞானி இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அந்த சமயத்தில் மலேசியாவில் நடந்த கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்றி ரசிகர்களுடன் பேசி அவர்களை சமாதானம் செய்தார் இளையராஜா.
தற்போது பூரண குணமடைந்துள்ள இளையராஜா மீண்டும் தனது இசைப்பணிக்கு திரும்பியுள்ளார். தற்போது பிரசாத் தியேட்டரில் கவிஞர் சினேகன் நடித்துவரும் ‘ராஜராஜசோழனின் போர்வாள்’ என்கிற படத்தின் பாடல் பதிவில் இருக்கிறார் இசைஞானி.
2011ல் ‘உயர்திரு 420’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார் பாடலாசிரியர் சினேகன். அதன்பிறகு நடிப்புக்கு ரெண்டு வருஷம் இடைவெளிவிட்டவர் இப்போது திரும்பவும் இந்த ‘ராஜராஜசோழனின் போர்வாள்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அமுதேஸ்வர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். 2014ல் இசைஞானி இசையமைக்கும் முதல்படம் என்பதாலும் அவர் பூரண குணமாகி மீண்டும் இசையமைக்க துவங்கியுள்ளதாலும் இந்தப்படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.