கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் ‘தரமணி’..!

245

taramani-movie-release

‘தங்கமீன்கள்’ என்கிற அற்புதமான படத்தை கொடுத்த இயக்குனர் ராம், தனது அடுத்த படத்தை கொடுக்க இவ்வளவு காலமா எடுத்துக்கொள்வார் என ரசிகர்கள் அவர்மீது உரிமையுடன் கோபத்தில் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.. அதேசமயம் நிறைய நாட்கள் ஆனாலும் அவரிடமிருந்து வெளிவரும் படைப்பு தரமாக இருக்கும் என்பதால் காத்திருப்பதில் தவறில்லை என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது..

அந்தவகையில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ‘தரமணி’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். உலகமயமாக்கல் ஆண், பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் தரமணி படத்தின் கதைக்களம்.

தற்போது இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியிட இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக “வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி பாடல்களை வெளியிடவும், அதனை தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் தேதி திரைப்படத்தை பிரம்மாண்ட முறையில் வெளியிடவும் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்” என ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார்.

Comments are closed.