
ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாநாயகி யார் என பார்க்கிறதை விட அதில் நடிக்கும் காமெடி நடிகர்கள் யார் யார் என்பதைத்தான் நன்றாக கவனிக்கின்றார்.. அந்தவகையில் சந்தானம், சூரி தவிர்த்து தனது படங்களில் அனைத்து காமெடி நடிகர்களையும் பயன்படுத்தி வருகிறார். அதில் உச்சபட்ச அம்சமாக இப்போது வடிவேலுவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.. இதில் வடிவேலு எப்படி உள்ளே வந்தார்..?. “என்னுடைய சிறு வயதிலிருந்தே நான் வடிவேலு சாரின் திரைப்படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய உடல் அசைவும், அவருடைய செய்கைகளும் ரசிகர்களின் நகைச்சுவை நரம்பை தட்டி எழுப்பும். இந்த படத்தின் கதையை இயக்குனர் ராம்பாலா கூறும் பொழுதே, வடிவேலு சார் மட்டும் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பதை நானும், தயாரிப்பாளர் ஸ்டீபனும் முடிவு செய்துவிட்டோம்” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
Comments are closed.