தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை.!!

78

‘சித்ரம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் 2000ம் ஆண்டில் நாயகனாக அறிமுகமானவர் தெலுங்கு இளம் நடிகர் உதய்கிரண். 2006ம் ஆண்டில், பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகனாக அறிமுகமானவர். சத்யராஜுடன் இணைந்து ‘வம்பு சண்டை’படத்திலும், கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘பெண்சிங்கம்’ படத்திலும் நடித்துள்ள இவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

33 வயதான உதய்கிரணுக்கும் சிரஞ்சீவியின் மகளுக்கும் சில வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து, பின்னர் திருமணம் ரத்தானது. அதன்பின் உதய்கிரண் அவரது தோழியான விஷிதாவை 2012 அக்டோபர் மாதம் தான் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட ஒரு வருட காலத்திலேயே இவர் இப்படி ஒரு முடிவைத் தேடிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

ஞாயிற்றுகிழமை தனியாக இருந்த உதய்கிரண் ஏன் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் நடிப்பில் வெளியான கடைசி 6 படங்கள் வரவேற்பை பெறவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. உதய்கிரணின் மறைவிற்கு பல்வேறு திரையுலக நடிகர், நடிகைகள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.