டாப்ஸியை ஐ.பி.எஸ் அதிகாரியா கற்பனை பண்ண முடியுதா..?

193

பொதுவாக நடிகைகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல போலீஸ் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு பல படங்களில் நடித்து பக்குவப்பட்டிருக்கவேண்டும்.. இல்லையென்றால் ‘கம்பீரம்’ படத்தில் லைலா நடித்தது போல ஆகிவிடும்.

இப்போது டாப்ஸிக்கும் ‘சுந்தரகாண்ட்’ என்ற இந்திப்படத்தில் போலீஸ் அதிகாரியாக, அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஏற்படும் காதல் தான் படத்தின் மையக்கதையாம்.. டாப்சிக்கு ஜோடியாக irfaan இர்பான்கான் நடிக்கிறார்.

இது தவிர ‘பேபி’ என்கிற படத்தில் சீக்ரெட் ஏஜென்ட்டாகவும் நடிக்கிறாராம் டாப்சி. இதுகூட ஓரளவுக்கு ஓகே தான். ஆனால் ஐ.பி.எஸ் அதிகாரியாக டாப்ஸியை கற்பனை பண்ண முடியுதா..? வரட்டும் அதையும் தான் பார்த்துடலாம்.

Comments are closed.