கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘பேபி’. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியுள்ளது.. படத்தின் பெயர் ‘நாம் ஷபனா’.. இந்தப்படம் தமிழில் ‘நான்தான் ஷபனா’ என்கிற பெயரில் வரும் மார்ச்-31ல் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தில் பிருத்விராஜும் மிக முக்கியமான வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த அக்சய் குமாரும் இதில் நடித்துள்ளார்.. ஆனாலும் கதையின் நாயகி ஷபனாவாக நடித்துள்ள டாப்ஸியை மையப்படுத்தி தான் படம் அமைந்துள்ளது என்பதை டைட்டிலும் தமிழில் வெளியாகியுள்ள ட்ரெய்லரும் சொல்லாமல் சொல்கிறது.

Comments are closed.