
‘அஞ்சான்’ படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிக்கிறார். இந்தப்படம் இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளை கவரும் விதமான சூர்யாவின் படமாக இருக்குமாம். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மனம்’ படத்தை விக்ரம் குமார்தான் இயக்கியுள்ளார். இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடித்துப்போகவே வெங்கட்பிரபுவின் படத்தை முடித்துவிட்டு இதில் நடிப்பார் என்று தெரிகிறது.
Comments are closed.