இந்தியாவிலேயே முதன்முறையாக சூர்யா படத்திற்கு ரசிகைகள் சிறப்பு காட்சி..!

237

tsk ladies fan show

எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் தீவிர பெண் ரசிகைகளும் இருப்பார்கள் தானே.. அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆசை இருக்காதா என்ன..? ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட மூன்று நாட்களுக்கு குறையாமல் ஆகும் என்பதால், தியேட்டர் பக்கம் ரசிகைகளால் நெருங்க முடியாது..

ஆனால் கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்த சூர்யாவின் ரசிகைகளுக்காக பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சிறப்பு காட்சியை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் இப்போதே விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் ரசிகைகள் சிறப்பு காட்சி திரையிடப்படுவது சூர்யாவின் படத்திற்குத்தான் என்பது ஹைலைட்டான அம்சம்.

Comments are closed.