சிறுவனை குடும்பத்துடன் குதூகலப்படுத்திய சூர்யா

244

surya with fan boy
தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் தினேஷ்.. 16 வயதாகும் இந்த சிறுவன் பத்து வயது முதலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நன்கு ஓவியம் வரையும் திறமையுள்ள இந்த சிறுவன் சூர்யாவின் தீவிர ரசிகனும் கூட.

சூர்யாவை சந்திக்கவேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசை.. சிறுவனின் ஆசையை அறிந்த சூர்யா அவனை தன் வீட்டிற்கு அழைத்து அவனிடம் பேசி, பரிசுப்பொருட்கள் தந்து உற்சாகப்படுத்தினார். மேலும் அந்த சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் தான் ஏற்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்காக தான் வரைந்த ஓவியம் ஒன்றை சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் பரிசளித்தார். அப்போது சூர்யாவுடன் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் தனது பங்கிற்கு சிறுவனை உற்சாகப்படுத்தினார்..

Comments are closed.