சூர்யாவுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் முன்னுரை கொடுத்தால் அடிக்க வருவீர்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம் நின்று கவனிப்பீர்கள் தானே..! ஒரே வீட்டிலேயே ரெண்டு சம்பந்தம் பண்ணுவது மாதிரி, கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தை இயக்கும்போதே அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவது என்பதும் முடிவு செய்யப்பட்டு விட்டது.
இந்தப்படத்திற்கான துவக்க விழா பூஜை வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments are closed.