சூர்யாவை கவர்ந்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ ட்ரெய்லர்..!

220

 

‘நாய்கள் ஜாக்கிரதை’… பெயரே படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக அமைந்தது சிபிராஜுக்கு கிடைத்த முதல் சக்சஸ்.. நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு மாஸ் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சிபிராஜ் என்பது அவர் நடித்துள்ள ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலகினரிடமும் இந்த ட்ரெய்லர் கவனம் பெற்றுவருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த ட்ரெய்லரை பார்த்த விஜய் அதை மனமுவந்து பாராட்டினார். தற்போது சூர்யாவையும் இந்த ட்ரெய்லர் கவர்ந்துள்ளது. அவரும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு சிபிராஜுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு இணையான கேரக்டரில், பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான் இந்தப்படத்தை  இயக்கியுள்ளார்.. தரண்குமார் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Comments are closed.