சில தனி நபர்கள் ட்ரோல் என்கிற பெயரில் நடிகர்களை விமர்சித்து வருவது தெரிந்த கதை தான். நடிகர்களது நடிப்பை, சமூக செயல்பாட்டை நாகரிகமாக கிண்டல் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்களது பெர்சனல் விஷயங்களை வைத்து அவர்களை கிண்டலடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை..
ஆனால் சமீபத்தில் சன் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இரண்டு பெண் தொகுப்பாளினிகள் காமெடி என்கிற பெயரில் நடிகர் சூர்யாவை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொதித்துப்போன சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி முன்பாக சென்று சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என கோஷத்துடன் போராட்டத்துக்கு ஆயுத்தமானார்கள். ஆனால் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஊக்குவிக்காத சூர்யா, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து அவர்களது செயலை கைவிட செய்துள்ளார்.
சூர்யா இந்த விவாகரம் பற்றி கூறி இருப்பதாவது, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் சமூகம் பயன் பெற பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்..

Comments are closed.