
தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில், தற்போது சூர்யா நடித்துவரும் ‘24’ படம் விறுவிறுப்பாக வளர்ந்துவருகிறது. இதுவரை இந்தப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா.
சமந்தாவை தவிர படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர் தான் நித்யா மேனன். ‘ஒகே கண்மணி’ மூலம் இளமை துள்ளும் நடிப்பை வெளிப்படுத்திய நித்யா மேனன், ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன் விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய ‘இஷ்க்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Comments are closed.