ரஞ்சித்துக்கு புகழாரம் சூட்டிய சூப்பர்ஸ்டார்..!

101

 

கடந்த 2ஆம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் ரிப்பீட் ஆடியன்சை தியேட்டருக்கு அழைத்துவரும் அளவுக்கு இருக்கிறதென்றால் படத்தின் வெற்றியைப்பற்றி தனியாக நாம் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் அரசியலை எந்தவிதமான  மேல்பூச்சும் இல்லாமல் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார். கூடவே அதில் ஒரு அழகான நட்பையும் பதிவு செய்திருந்தார் இயக்குனர் ரஞ்சித்.

தற்போது ரஞ்சித்திற்கு எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து பாராட்டு தேடி வந்துள்ளது.. ஆம்.. மெட்ராஸ் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், ‘ஐ’ பாணியில் சொன்னால்.. ரொம்பவே மெர்சலாகிவிட்டார். “சூப்பர் கண்ணா சூப்பர்…. கலக்கிட்ட.. எப்படி கண்ணா இப்படி சூட் பண்ண.. சூப்பர் கண்ணா கலக்கிட்ட..” இது தான் ரஜினி சொன்ன வார்த்தைகள்.. அட்டகத்தி ரஞ்சித் இப்போது ஆகாயத்தில் அல்லவா மிதந்துகொண்டிருப்பார்.

Comments are closed.