பிரதமரின் ‘தூய்மை பாரதம்’ பிராச்சாரத்தில் இணைந்தார் சூர்யா..

62

 

காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மையான பாரதம்’ என்கிற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற என்னத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த பிரச்சாரம் மக்களிடம் சென்றடைய இந்தியாவில் உள்ள சில பிரபலங்களையும் இந்த பிரச்சாரத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் உலகநாயகன் கமலுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதை கமலும் ஏற்றுக்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவும் இந்த ‘தூய்மையான பாரதம்’ பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதிவிட முக்கியமானது தூய்மையான சுற்றுப்புற சூழலை அவர்களுக்கு அளிப்பது. பிரதமர் மோடியின் தூய்மையான பாரதம் இயக்கத்தில் இணைந்து அதற்கு ஆதரவு தாருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.