சூப்பர்ஸ்டாரை கவர்ந்த பாடல்..! விஷாலை பாராட்டிய ரஜினி..!!

87


திரு இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒன் பிளஸ் ஒன் ஆஃபராக, ’ஏலேலோ’ என்ற பாடலை தனியாகவும், ‘இதயம் உன்னை தேடுதே பாடலை சைந்தவியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். இதில் ‘இதயம் உன்னை தேடுதே’ பாடல் சூப்பர்ஸ்டார் ரஜினியை மிகவும் கவர்ந்துவிட்டது.

படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு முன்பாக சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்ததோடு படத்தின் பாடல்களையும் போட்டுக்காட்டியிருக்கிறார்கள் விஷாலும் இயக்குனர் திரு உள்ளிட்ட படக்குழுவினர்.. படத்தின் டீஸரையும் பாடல்காட்சிகளையும் ரசித்துப் பார்த்த ரஜினி ஜீ.வி.பிரகாஷின் இசையை ரசித்திருக்கிறார்.

குறிப்பாக ஜீ.வி.பிரகாஷும் சைந்தவியும் இணைந்து பாடிய ‘இதயம் உன்னை தேடுதே’ பாடலில் அவர்கள் இருவரின் குரல் ரஜினியை வசீகரித்துவிட்டது. இந்தப்பாடலில் காட்சிப்படுத்தப்பட்ட வண்ணங்களுக்காக ஒளிப்பதிவாளரையும் ரொம்பவே பாராட்டியுள்ளார்.

மேலும் படத்தின் கதைபற்றியும் விஷாலின் கதாபாத்திரம் பற்றியும் கேட்டுத்தெரிந்து கொண்டார் ரஜினி. புது இயக்குனர்களையும் புதுவிதமான கதைகளையும் ஊக்குவிக்கும் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிகள் காத்திருக்கிறது எனக்கூறிய ரஜினி முன்கூட்டியே தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் செண்ட்டிமெண்ட்டாக 25 வருடங்களுக்கு முன் இதே டைட்டிலில் நடித்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் கையாலேயே ஆடியோ சிடியை வெளியிட வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த சந்திப்பின்போது விஷால், இயக்குனர் திரு, ஜீ.வி.பிரகாஷ், தனஞ்செயன், சோனி மியூசிக்கின் நிர்வாகி அசோக் பர்வானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.