அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ‘கபாலி’

249

rajini reached chennai 1
வழக்கமாக ரஜினி தனது படங்கள் ரிலீசாகும் சமயத்தில் சென்னையில் இருக்கமாட்டார்.. இமயமலை அல்லது வெளிநாடு என எங்காவது சென்று விடுவார். அதேபோலத்தான் ‘கபாலி’ பட ரிலீஸுக்கு பல நாட்கள் முன்னதாகவே ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டார் ரஜினி..

சிலர் அவருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லை.. சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால் அமெரிக்காவில் பூரண ஆரோக்கியத்துடன் இருந்த ரஜினி, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டது, கபாலி ரிலீஸுக்கு முதல்நாள் சிறப்பு காட்சியாக ‘கபாலி’ பார்த்தது என அங்கிருந்தபடியே தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார்..

தற்போது ‘கபாலி’ ரிலீஸாகியுள்ள நிலையில் நேற்று தனது மகளுடன் சென்னை திரும்பினார் ரஜினி. விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்களின் வரவேற்புக்கு கையசைத்து நன்றிi தெரிவித்துவிட்டு காரில் கிளம்பினார் ரஜினி.

Comments are closed.