
வெகு நாட்கள் பேச்சில் இருந்த சின்னத்திரை தொழிலார்கள் ஊதிய உயர்வு சார்ந்த பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாணப்பட்டது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் குஷ்பு உட்பட பல நிர்வாகிகளும் பெப்சி தலைவர் சிவா மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளும் கலந்து பேசி சுமூகமான தீர்வை எடுத்துள்ளனர்.
தற்போது நலிந்துகொண்டு வரும் சின்னத்திரைக்கு இந்த ஒப்பந்தம் புத்துணர்வை அளிக்கும் என இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் இந்தமுறை 27.5% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இன்று முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏழு பிரிவை சேர்ந்த 5௦௦௦ தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள்
Comments are closed.