தமிழ்சினிமாவின் முக்கியமான பிராண்ட்களில் ஒன்றாக விளங்குவது தேனாண்டாள் பிலிம். தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 61வது படத்தை தயாரித்து வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ்.. ராம.நாராயணன் மறைவுக்கு பிறகு தற்போது முரளி ராமசாமி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றை மிக சிறப்பாக கவனித்து வருகிறார்.
குறிப்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை தயாரித்தாலோ அல்லது வெளியிட்டாலோ அந்தப்படம் நிச்சயம் நல்ல படமாக இருக்கும் என்கிற பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.. இந்தநிலையில் தயாரிப்பாளர் முரளியின் பிறந்தநாள் வரவே படத்தின் நாயகன் விஜய், நாயகி சமந்தா மற்றும் இயக்குனர் அட்லீ உள்ளிட்டோர். அதை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்

Comments are closed.