
காமெடி படங்களை விட குழந்தைகளை பேய்ப்படங்கள் எளிதில் வசீகரித்து விடுகின்றன. அரண்மனை, டார்லிங், காஞ்சனா-2 என சமீபத்திய ஹாரர் படங்கள் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக ‘சவுகார்பேட்டை’ என்கிற பேய்ப்படத்தில் நடிக்கிறார்.
தனது தந்தையும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்கிறார் என்றதும் அவரது மகள் ரொம்பவே குஷியாகி அப்பாவுடன் முன்னைவிட நெருக்கம் காட்டுகிறாராம். அவரது மகனும் மகளும் ஸ்ரீகாந்த் பேய்ப்படத்தில் நடிப்பதை ரொம்பவே விரும்புகின்றனராம். வடிவுடையான் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 3௦ சதவீதத்தை தாண்டி வளர்ந்து வருகிறது.
Comments are closed.