
பக்கத்து வீட்டுப்பெண் கேர்கடர் என்று சொல்லியே எத்தனை நாளைக்குத்தான் ஸ்ரீதிவ்யாவை ஒரு வட்டத்துக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பார்கள்..? அதுதான் பார்த்தார் இயக்குனர் கோகுல்.. கார்த்தியை வைத்து தற்போது தான் இயக்கிவரும் ‘காஷ்மோரா’ படத்தில் ஸ்ரீதிவ்யாவை ஜர்னலிஸ்ட்டாக மாற்றிவிட்டார். இதில் முற்றிலும் புதிய ஸ்ரீதிவ்யாவை பார்க்கலாம் என்கிறார்கள்.
இந்தப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் நாளை துவங்க இருக்கிறது. இதை முடித்துவிட்டு பல்கேரியா நாட்டுக்கு பறக்க இருக்கிறது ‘காஷ்மோரா’ டீம். இதற்கான லொக்கேசன் விசிட்டை சமீபத்தில் தான் பல்கேரியாவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளார் இயக்குனர் கோகுல்.
Comments are closed.