ஸ்ரீதிவ்யாவை விடாமல் துரத்தும் வெள்ளை சீருடை…!

100

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி ஸ்ரீதிவ்யா ‘ஜீவா’, ‘பென்சில்’, ‘டாணா’ என தமிழ்சினிமாவில் கவனமாக தனது இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘ஜீவா’ படத்தில் பள்ளி மாணவியாக வெள்ளை சீருடையில் வந்து இளைஞர்களின் மனதை கிறங்கவைத்தார்.

தொடர்ந்து தற்போது துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் ‘டாணா’ படத்திலும் அவருக்கு வெள்ளை சீருடை தான். ஆம்.. இந்தப்படத்தில் நர்ஸாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா.. இதற்காக இரண்டு நர்ஸ்களை சந்தித்து அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னரே படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம் ஸ்ரீதிவ்யா.

Comments are closed.