தயாநிதி அழகிரி –அனுஷா ; நான்காம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள்

46

கலைஞர் கருணாநிதியின் பேரன், மு.க.அழகிரியின் மகன் என்ற அரசியல் அடையாளங்களைத் தாண்டி, இன்று தமிழ்சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக தனக்கென ஒரு அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தயாநிதி அழகிரி. ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் விநியோகஸ்தராக அடியெடுத்துவைத்து, ‘தமிழ்படம்’ மூலம் தயாரிப்பாளராக மாறிய தயாநிதி 2011ல் அஜீத்தை வைத்து ‘மங்காத்தா’ என்ற மாஸ்ஹிட் படத்தையும் தயாரித்தார்.

இன்று தமிழ்சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக பிஸியாக இயங்கிவரும் இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுஷாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2010ஆம் வருடம் திருமணம் செய்தார். இன்று வெற்றிகரமாக நான்காம் ஆண்டு திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கும் தயாநிதிக்கும் அவரது மனைவி அனுஷாவிற்கும் behind frames தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.