‘காட்டுக்குயிலுக்கு’ப்பின் 26 வருடம் கழித்து இணைந்து பாடிய எஸ்.பி.பி-யேசுதாஸ்..!

206

spb - kjj

அந்த யோசனை தான் காந்தக்குரல்களுக்கு சொந்தக்காரர்களான யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு பாடலை பாடவைத்துள்ளது. ஆம்..

கடந்த 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு’ பாடல் எந்த அளவுக்கு ஹிட் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.. அதன்பின் இந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒரே பாடலில் இணைந்து பாடவேயில்லை.. இப்போதுதான் 26 வரும் கழித்து மீண்டும் இணைந்து பாடுகின்றனர்.. அதுவும் ஒரு மலையாளப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக.

மலையாள சினிமா இயக்குனரான எம்.ஏ.நிஷாத் தற்போது குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு ‘கிணர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் தமிழில் ‘கேணி’ என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இது சின்ன பட்ஜெட் படம் என்றாலும், குடிதண்ணீர் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு படம் என்பதால் இதை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு படத்தை பிரபலத்தப்படுத்தும் ஒரு இந்த இரண்டு கானக்குயில்களையும் இணைந்து பாட வைத்துள்ளார்.

இந்தப்பாடல் வரிகளில் தமிழும் மலையாளமும் கலந்தே வருகின்றன.. தமிழ் வரிகளை பாடலாசிரியர் பழனிபாரதியும் மலையாள வரிகளை ஹரிநாராயணனும் எழுதியுள்ளனர் எம்.ஜெயச்சந்திரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Comments are closed.