விஜய் டிவியில் சிவகுமாரின் ‘நெல்லையில் சிவகுமார்’ என்ற தலைப்பிலான நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பிரபலங்கள் பலரும் அந்நிகழ்ச்சி தங்களுக்கு எந்த மாதிரியான ஒரு அனுபவத்தை தந்தது என சிவகுமாரிடம் பகிர்ந்துகொண்டனர்.
இதுகுறித்து எழுத்தாளரும் கதாசிரியருமான பட்டுக்கோட்டை பிரபாகர், “வழக்கம் போலவே நேற்றைய நிகழ்ச்சியிலும் உங்கள் பதில்களில் சமூகத்தின் மீதும் அடுத்த தலைமுறையினர் மீதும் நீஙகள் கொண்டுள்ள மனப்பூர்வமான அக்கறை பளிச்சிட்டது. இளைய தலைமுறைக்கான நேர்மறை வழிகாட்டியாய் விளங்கிய திரு.அப்துல் கலாமின் இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை நீங்கள் நிரப்பி விட்டீர்கள் சார். அறிவார்ந்த மக்கள் எப்படி மற்றவர்களை ஊக்குவிக்கும் பணியைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டு்ம் என்பதற்கும் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறீர்கள். பெருமையுடன் வாழ்த்தி வணங்குகிறேன் சார்.: என மனதார பாராட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்த பலரும் சிவகுமாரிடம் ட்விட்டர் மூலமாக தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.