சிவகார்த்திகேயனுக்கு இப்போது ஏறுமுகம்தான். கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு இப்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மூலமாக. ஆம்.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்.