இரண்டேகால் மணி நேரத்தில் ‘மகாபாரத’ கதை சொன்ன சிவகுமார்..!

187

sivakumar - mahabarath
டிவி தொடராக எடுத்தால் இரண்டு வருடத்திற்கு மேல் இழுக்கும் புராணக்கதையான மகாபாரதத்தை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்வது என்பது சவாலான விஷயம்தான். அதிலும், எந்த ஒரு முக்கியமான நிகழ்வுகளும் விடுபட்டு போகாமல், கேட்பவருக்கும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

ஆனால் நேற்று ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாபாரத கதையை இரண்டேகால் மணி நேரத்தில் சொற்பொழிவாக நிகழ்த்திக்காட்டி கல்லூரி மாணவர்களிடையே பலத்த கைத்தட்டல் வாங்கியிருக்கின்றார் நடிகர் சிவகுமார். இதற்காக இரண்டு வருடங்களாக மகாபாரத கதையுடனே வாழ்ந்திருக்கிறார் சிவகுமார்..

இதற்குமுன் இராமாயண கதையையும் இதேபோல, இதே கல்லூரியிலேயே இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லி சாதனை நிகழ்த்தியவர்தான் சிவகுமார். அது ஆடியோ சிடி வடிவில் கூட பின்னர் வெளியானது. அந்த சமயம் அவரது சொற்பொழிவை நேரில் கேட்காமல் மிஸ் பண்ணிய சிவகுமார் குடும்பத்தினர், இந்தமுறை ஈரோட்டில் நடந்த மகாபாரத சொற்பொழிவை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

சிவகுமாரின் பிறந்தநாளை (இன்று) முன்னிட்டு இந்த சொற்பொழிவு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது.. இன்று தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கும் சிவகுமார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது ஒரு தமிழனாக நம் அனைவரும் பெருமைப்பட்டுகொள்ள வேண்டிய முக்கியமான நிகழ்வு ஆகும்.

Comments are closed.