
இயக்குனர் ஹரி இயக்கும் படங்களில் ஹீரோக்களின் கதாபாத்திரங்களை தூக்கி நிறுத்துவது அவர்களுக்கு சமமாக நடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களே. அந்த வகையில் சூர்யா நடித்து சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரகாஷ்ராஜ் மற்றும் டேனி ஆகியோர் வில்லன்களாக பிரமாதப்படுத்தினார்கள்..
அந்தவகையில் தற்போது உருவாகிவரும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்திலும் வலுவான வில்லனை தேடிப்பிடித்து நடிக்கவைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. அவரது பெயர் தாகூர் அனூப் சிங். இவர் பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார் அவரும், சூர்யாவும் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.
Comments are closed.