புதிய பட டைட்டிலை அறிவித்தார் சிம்பு…!

210

aaa
சிம்பு நடித்த படங்கள் ரிலீசாகிறதோ இல்லையோ, அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் அவருக்காகவே கதை பண்ணக்கூடிய ஒரு சில இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சிம்பு.. இதன் டைட்டிலை மே-1ஆம் தேதியான இன்று வெளியிடுவதாக அவர் அறிவித்திருந்தார்.

காரணம் அஜித் ரசிகரான சிம்பு, அவரது பிறந்தநாளான இன்று தனது டைட்டிலை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என கருதினார். அதன்படி தனது புதிய படத்திற்கு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என டைட்டில் வைத்துள்ளார். அதை ஆங்கிலத்தில் எளிதாக சொல்லும் விதமாக ‘AAA’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.