சோஷியல் மீடியாவை பொறுத்தவரை சினிமா பிரபலங்களில் மற்ற யாரையும் விட கமல், சிம்பு இருவர் வெளியிடும் கருத்துக்கள், பதிவுகள் தான் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதில் கமல் விமர்சனங்களை சாமர்த்தியமாக கடந்துபோகிறார். ஆனால் சிம்புவால் இந்த விஷயத்தில் நிதானம் காட்ட முடியவில்லை.. இந்தநிலையில் இன்று டிவிட்டரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் சிம்பு.
வெளியேறும் முன் அவர் கடைசியாக டிவிட்டரில் வெளியிட பதிவு இதுதான்…
“எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்
சுதந்திர தின வாழ்த்துகள்”
என வேதனையுடன் வெளியேறியுள்ளார் சிம்பு

Comments are closed.